முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


         சேலம் மாவட்ட ஆட்சியர்.திரு.S.கார்மேகம்

 டிசம்பர் 31, 
முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தை சேர்ந்த முப்படைகளிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் செல்போன் பழுது நீக்குதல், கார் மெக்கானிக், குளிர் சாதனப்பெட்டி பராமரிப்பு, எலக்ட்ரீசியன், பிளம்பிங், ஓட்டுனர் பயிற்சி, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பராமரித்தல் மற்றும் அதற்கான மின்சார பேட்டரி பராமரித்தல், பழுது பார்த்தல், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பழுது பார்த்தல், பராமரித்தல், பேட்டரி சார்ஜ் செய்வதற்கான நிலையம் அமைத்து பராமரித்தல் உள்ளிட்ட தொழிற்பயிற்சிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, கணினி தட்டச்சு பயிற்சி மற்றும் வன்பொருள் பழுது பார்த்தல், ஆடை வெட்டுபவர், கை வேலைப்பாடுகள் (எம்பிராய்டரி), மணப்பெண் ஒப்பனை உதவியாளர், அழகு மற்றும் ஆரோக்கிய உதவி ஆலோசகர், தின்பண்டம், பேக்கரி தொழில் உள்ளிட்ட பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. எனவே, பயிற்சி பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உடனே விண்ணப்பிக்கலாம். மேலும் விவரம் பெற சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொருள்:சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சீரமைத்து ஆத்தூர் புதிய மாவட்டம்,புதிய வருவாய், வட்டம்,புதிய வருவாய் கோட்டம்,புதிய ஊராட்சி ஒன்றியத்தை ஏற்படுத்துவதற்காக.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில்செவிலியர் பட்டயப் படிப்பு (DGNM) ,(B.Sc Nursing, படித்தோருக்கு வேலைவாய்ப்பு

கருணை காட்ட கடவுள்கள் தேவையில்லை... மனிதர்களுக்கு கருணை மிகுந்த மனமிருந்தால் போதும்.!!