இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கருணை காட்ட கடவுள்கள் தேவையில்லை... மனிதர்களுக்கு கருணை மிகுந்த மனமிருந்தால் போதும்.!!

படம்
கருணை காட்ட கடவுள்கள் தேவையில்லை... மனிதர்களுக்கு கருணை மிகுந்த மனமிருந்தால் போதும். பொறியாளர்:திரு.சின்னராஜா செல்லதுரை சவுதி அரேபியாவில் பணிபுரியும் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கொப்பம்பட்டியை சேர்ந்த திரு.சின்னராஜா செல்லதுரை என்பவர் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு தான் படித்த அரசு உதவி பெறும் பள்ளிக்கு ரூ.74,000/-வை பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட 148 மாணவர்களுக்கு, தலா ரூ 500 வீதம் பகிர்ந்து கொடுத்துள்ளார். உதவிகள் பற்றிய விபரங்கள் https://drive.google.com/drive/folders/16VAtZc-q9goGHwrq643yg8hvp2RGCET6 மேலும் இவர் தமிழன் திரைபட பானியில் தமிழக அரசின் கடனை அடைக்க சவுதி அரேபியாவில் இருந்து தனது பங்காக ரூ.90 ஆயிரம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில்செவிலியர் பட்டயப் படிப்பு (DGNM) ,(B.Sc Nursing, படித்தோருக்கு வேலைவாய்ப்பு

படம்
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில்  செவிலியர் பட்டயப் படிப்பு (DGNM) ,(B.Sc Nursing, படித்தோருக்கு வேலைவாய்ப்பு சேலம் மாவட்டம் : மாவட்ட நலவாழ்வு சங்கம் (சேலம் மாவட்டம்) மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை சேலம் மாவட்டத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற நலவாழ்வு மையம் (U-HWQ) உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30-01-2023 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்க்கப்படுகின்றன. மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை:218 பதவி,கல்வி தகுதி,விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய  முகவரி ஆகியவை link ஐ Click செய்யவும். https://drive.google.com/file/d/10JX0_Wfc27o4-YeL5ouRc3KinoUlYqW-/view?usp=drivesdk நாமக்கல் மாவட்டம்: மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை:211 நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவ கல்லூரி மருத்துவமனை,நகர்புற நலவாழ்வு மையம் (U-HWQ) உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25-01-2023

சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்

படம்
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (05.01.2022) இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.    Click: 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்

தம்மம்பட்டியில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி முகாம்!

நன்றி:மணியன்  தம்மம்பட்டியில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி முகாம்! தம்மம்பட்டியில், கால்நடைத்துறை சார்பில் நாளை முதல் வரும் 6 நாட்களுக்கு அம்மைநோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.      6 ஆம் தேதி, வாழக்கோம்பை மாரியம்மன் கோவில், அடுக்கம் பிரிவுரோடு நிழற்கூடம், கருமாயிவட்டம். 7 ஆம் தேதி, ஜங்கமசமுத்திரம் (செங்காடு ) ஊராட்சி அலுவலகம், ஜங்கமசமுத்திரம் துவக்கப்பள்ளி, செல்வநகர் மாரியம்மன் கோவில், வள்ளுவர்நகர் மாரியம்மன் கோவில். 9 ஆம் தேதி, குட்டிக்கரடு சின்னண்ணன் பெரியண்ணன் கோவில், வசந்தன்நகர், புலிக்கரடு ஆற்றுமேடு. 10 ஆம் தேதி, கொக்கான்காடு காளிக்கோவில், செங்கொடி நகர். 11 ஆம் தேதி, பனந்தோப்பு பிள்ளையார் கோவில், கெங்கவல்லி ரோடு செக்குமேடு. 12 ஆம் தேதி, உப்பாத்துக்காடு.       இந்த நாட்களில், மதியம் 1 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை பசுமாடு, எருமை மற்றும் கன்றுக்குட்டிகளுக்கு அம்மைநோய் தடுப்பூசி போடப்படும் என, தம்மம்பட்டி அரசு கால்நடை மருத்துவர் ஆர்.செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

"2023" தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு நடக்குமா?

படம்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக இந்த ஆண்டு நடைபெறுமா? சேலம் மாவட்டம்  தம்மம்பட்டியில் ஆண்டு தோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா ஆண்டுதோறும், பல மாவட்டங்களின் காளைகள்  பங்கேற்று சிறப்பாக நடந்து வருகிறது.  தென் தமிழகத்தின் சிறப்பை போல வட தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. செந்தாரப்பட்டி ஜல்லிக்கட்டின் 1969 ஆம் ஆண்டு அழைப்பிதழ் மிகவும் புகழ் பெற்ற தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு தமிழக அளவில் நான்காமிடமும்,வட தமிழகத்தில் முதலிடமும் சிறப்பு வாய்ந்தது தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி இரட்டை சகோதரிகள் தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் உலிபுரம் பகுதியில் இருந்து தம்மம்பட்டி வரை 5 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டம் ஓடி போராட்டாத்தில் வலு சேர்த்து தமிழகமே திரும்பி பார்த்த பெயர் உண்டு தம்மம்பட்டிக்கு.    திருச்சி, மதுரை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகள் ஒன்றன் பின் ஒன

சேரடி முதல் சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கியது.

படம்
  தம்மம்பட்டி:ஜன'3 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சுற்றுலா செல்வோர் மற்றும் மலைவாழ் மக்களின் நலனுக்காக மூன்றாவது வழிப்பாதையான வேலிக்காடு முதல் தம்மம்பட்டி வரை சாலை அமைக்கப்பட்டு சுற்றுலா செல்பவர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் தங்கள் தேவைகளுக்கு தம்மம்பட்டிக்கு எளிதாக வந்து செல்கின்றனர்.கடந்த ஒரு வாரமாக நாமக்கல் முதல் அரப்பளீஸ்வரர் கோவில்,வேலிக்காடு,சேரடி வழியாக  தம்மம்பட்டி வரை சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாமக்கல் பணிமனையில் இருந்து இயக்கப்படுகிறது.இந்நிலையில் வேலிக்காடு முதல் சேரடி வரை சில இடங்களில் சாலை குறுகலாக இருப்பதால் தற்போது சாலை அகலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.