இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

படம்
         சேலம் மாவட்ட ஆட்சியர்.திரு.S.கார்மேகம்  டிசம்பர் 31,  முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.  சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தை சேர்ந்த முப்படைகளிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் செல்போன் பழுது நீக்குதல், கார் மெக்கானிக், குளிர் சாதனப்பெட்டி பராமரிப்பு, எலக்ட்ரீசியன், பிளம்பிங், ஓட்டுனர் பயிற்சி, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பராமரித்தல் மற்றும் அதற்கான மின்சார பேட்டரி பராமரித்தல், பழுது பார்த்தல், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பழுது பார்த்தல், பராமரித்தல், பேட்டரி சார்ஜ் செய்வதற்கான நிலையம் அமைத்து பராமரித்தல் உள்ளிட்ட தொழிற்பயிற்சிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, கணினி தட்டச்சு பயிற்சி மற்றும் வன்பொ

சேலம் மாவட்டத்தில் கொரோனாவை எதிர்கொள்ள 7 ஜி.ஹெச்.,ல் 250 படுக்கை தயார்.

"சேலம் மாவட்டத்தில் கொரோனாவை எதிர்கொள்ள, 7 அரசு மருத்துவமனைகளில், 250 படுக்கைகள் தயாராக உள்ளன,' என, சுகாதார இணை இயக்குனர் நெடுமாறன் தெரிவித்தார். ஆத்துார் அரசு மருத்துவம னையில் மீண்டும் கொரோனா சிகிச்சைக்கு தனியே மையம், ஆக்சிஜன் உதவியுடன் அமைக் கப்பட்டுள்ளது. அங்கிருந்து உற் பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை சிலிண்டர்களில் நிரப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சேல்ம் சுகாதார இணை இயக்குனர் நெடுமாறன் கூறியதாவது: சேலம் மாவட் கொரோனா பரிசோதனை மையம். டத்தில் ஆத்துார், மேட்டூர், இடைப்பாடி, ஓமலுார், சங்க கிரி, வாழப்பாடி, பெத்தநாயக் கன்பாளையம் ஆகிய அரசு மருத்திருக்க அறிவுறுத்தப்பட்டது. துவமனைகளில் பரிசோதனை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, 250 உள்ளன. படுக்கைகள் தயாராக உள்ளது. ஆத்துார், இடைப்பாடி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் உள்ளது. உள்ளதால், போதிய அளவில் ஆக்சிஜன் சிலிண்டர் வைத் மேட்டூரில், 3,000 லிட்டர் கொள்ளளவு; 'டேங்க்'கில் ஆக்சிஜன் இருப்பு உள்ளது. தவிர, 45 வெண்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து கருவி களும் உள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர் போதிய அளவில் மருத்துவ

தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி

படம்
2014ம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழுக்கு ₹ 7,410.29 கோடியும் சமஸ்கிருததிற்கு ₹ 1,48,783.70 கோடியும் நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு பதில்

தம்மம்பட்டி சிவன் கோவிலில் கொள்ளை முயற்சி!

படம்
தம்மம்பட்டி சிவன் கோவிலில் கொள்ளை முயற்சி! முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை!! தம்மம்பட்டி, டிச.28- தம்மம்பட்டி சிவன் கோவிலின், வாயிற் கதவின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கொள்ளையர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.      சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேருந்துநிலையம் பின்புறம், சுவேநதியையொட்டி, 700 ஆண்டுகள் பழைமையான காசிவிசுவநாதர் சிவன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், சில நாட்களாக சுற்றுச் சுவர் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அதற்காக தினமும் ஏராளமான தொழிலாளர்கள் கட்டுமானப்பணியில்  ஈடுபட்டுள்ளனர்.       இந்நிலையில், நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்து வந்த இரண்டு நபர்கள், கோவிலின் முன்புறம் உள்ள இரண்டு சி.சி.டி.வி. கேமிராக்களின் ஒயர்களை துண்டித்துவிட்டு, வாயி்ற்கதவின் பூட்டை உடைத்து கோவிலுக்குள் நுழைந்தனர். உள்பிரகாரத்திற்குள் செல்லும் வாயிற்கதவு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் போடப்பட்டுள்ளதால், அதன் பூட்டை கடப்பாறை கம்பியால் உடைத்து அந்த கதவை திறக்க முயன்றுள்ளனர். அதை திறக்க முடியாததால், கோவில் வெளிப் ப

கொல்லிமலைக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம் நாமக்கல்-அரப்பளீஸ்வரர் கோவில்-தம்மம்பட்டி

தம்மம்பட்டி-வாழக்கோம்பை-சேரடி  வழியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து சேலம் கோட்டம் சார்பாக கொல்லிமலைக்கு நாமக்கல் வரை செல்ல மூன்றாம் வழித்தடத்தில் புதிய பேருந்து சேவை இயக்கப்பட்டுள்ளது. பேருந்து நேர அட்டவணை அறிய 👉    Click நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், ஆலத்தூா் நாடு ஊராட்சிக்கு உள்பட்ட ஆலேரிப்பட்டி கிராமத்தில், நாமக்கல் - கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில் - தம்மம்பட்டி இடையே புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்க தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.